'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு (2024) ஜனவரி 25ல் மறைந்தார். மகளின் நினைவு நாளன்று இளையராஜா தனது 'எக்ஸ்' தளப்பக்கத்தில், ''பவதாரிணியின் பிறந்த நாளான பிப்ரவரி 12 அன்றைக்கு அவரின் திதியும் வருகிறது. இரண்டையும் சேர்த்து நினைவுநாள் நிகழ்ச்சியாக வைக்கலாம் என்ற எண்ணம் இருக்கிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, பவதாரிணியின் பிறந்தநாளான இன்று (பிப்.,12), அவரது நினைவிடம் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் இசைக்கலைஞர்களை வைத்து நினைவு நிகழ்ச்சி நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இயக்குனரும், பவதாரிணியின் சகோதரருமான வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில், 'ஓராண்டு ஆகிவிட்டதை நம்பவே முடியவில்லை. பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கச்சி' எனக் குறிப்பிட்டு, சென்ற வருடன் இதேநாளில் பகிர்ந்த பவதாரிணி உடன் இருக்கும் புகைப்படத்தை ரீடுவீட் செய்துள்ளார்.