புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
30 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவா. 400 படங்களுக்கு இசையமைத்துள்ள இவரின் ஸ்பெஷலே கானா பாடல் தான். இன்றைக்கு இருக்கும் பல கானா பாடகர்களுக்கு முன்னோடியாகவும் உள்ளார். தற்போதும் குறிப்பிடத்தக்க சில படங்களுக்கு இவர் இசையமைக்கிறார். அதோடு இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛நான் காப்பிரைட்ஸ் எல்லாம் கேட்க மாட்டேன். என் பாடல்களை இப்போதுள்ள இயக்குனர்கள் அவர்களது படங்களில் பயன்படுத்துவதால் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுடன் நான் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்களின் ரசனைக்கு முன்பு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் ஈடாகாது'' என தெரிவித்துள்ளார்.
ஒருபக்கம் இளையராஜா அவரது பாடல்கள், இசையை பயன்படுத்துவது தொடர்பாக காப்பிரைட் கேட்பது, அது தொடர்பாக சில சர்ச்சைகள், வழக்குகள் என உள்ள சூழலில் தேவாவின் இந்த அணுகுமுறையை பலரும் பாராட்டுகின்றனர்.