'எல் 2 எம்புரான்' படத்தின் பட்ஜெட் இவ்வளவுதானா ? | அஜித், தனுஷ் கூட்டணியை உறுதி செய்த தயாரிப்பாளர்! | சல்மான்கான் சொன்ன கதைக்கு மறுப்பு தெரிவித்து ஏ.ஆர். முருகதாஸ்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தின் புதிய அப்டேட்! | பாவனாவின் வருஷம் 14! | முதல் பாகத்தில் இறந்தேன்.. 2ம் பாகத்தில் நடித்துள்ளேன் ; எம்புரான் நடிகர் வைக்கும் டுவிஸ்ட் | 15 கோடி கேட்கும் ரவுடி பேபி | ‛கட் அண்டு ரைட்'டாக பேசும் நடிகை | 'இன்ஸ்டன்ட் ஹிட்' ஆன 'ரெட்ரோ' கனிமா….. | 'மதராஸி' படப்பிடிப்பு எப்போது முடியும்? |
நடிகர் தனுஷ், தயாரித்து இயக்கியுள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இத்திரைப்படத்தில் தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். ஹீரோயின் ஆக விசுவாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா சுரேந்திரன் நடித்துள்ளார். அவர்களுடன் பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ராபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன், உதய் மகேஷ், ஶ்ரீதேவி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இசையமைக் க, லியான் பிரிட்டோ ஒளிப்ப திவு செய்ய, பிரசன்னா ஜிகே எடிட்டிங் மேற்கொள்கிறார். இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக எஸ்.ஜே.சூர்யா, அருண் விஜய், இயக்குனர்கள் செல்வ ராகவன், கஸ்தூரி ராஜா, விக்னேஷ் ராஜா, ராஜ்குமார் பெரியசாமி, தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான நடிகர் தனுஷ் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து விசாரித்தபோது, இது தனது குடும்ப விழாவாக மாறிவிடக்கூடாது என்பதற்காகவும், தான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் ஒட்டு மொத்த மீடியாக்களின் கவனமும் தன் மீது திரும்பிவிடும் என்பதற் காகவும் இந்த விழாவை அவர் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. அதோடு தனது சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகம் ஆவதால் அதற்காகத்தான் அவர் பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என்ற சர்ச்சை தொடங்கிவிடும் என்பதற்காகவும் அவர் அந்த நிகழ்ச்சியை தவிர்த்ததாக தெரிகிறது.
சமீபத்தில் பவிஷ் உள்ளிட்ட நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்தபோது கூட பவிஷிடம், தனுஷ் உங்கள் மாமா என்ப தால் இந்த வாய்ப்பு உங்களு க்கு கிடைத்ததா என கேட்டதற்கு, நிச்சயமாக இல்லை அவரிடம் நான் உதவி இயக்குனராக மூன்று படங்களில் பணியாற்றினேன். அந்த அனுபவத்தின் காரணத்தாலும், இந்த கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேன் என தனுஷ் நினைத்தாலும் என்னை இதில் நடிக்க வைத்தார். அதோடு தனுஷை நான் என் குருநாதன் ஆக மட்டுமே பார்க்கிறேன். உறவினராக பார்க்கவில்லை. எனவே எங்கள் உறவுமுறை குறித்த கேள்வி வேண்டாம் என கூறி விட்டார்.