இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி. தற்போது விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஐதராபாத்தில் நடிகர் பிரம்மானந்தம் நடித்துள்ள ‛பிரம்ம ஆனந்தம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சிரஞ்சீவி கலந்து கொண்டார். விழாவில் அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் பெண் பிள்ளைகள் பற்றி பேசிய விஷயம் சர்ச்சையாகி உள்ளது.
அவர் கூறியதாவது, ‛‛என் வீட்டில் என்னை சுற்றி அதிகம் பெண்களே இருக்கிறார்கள். இதனால் மகளிர் விடுதியின் வார்டனை போன்று நான் உணர்கிறேன். மேலும் எனது பரம்பரை தொடர இந்த முறையாவது மகனை பெற வேண்டும் என என் மகன் ராம் சரணை கேட்டுக் கொள்கிறேன். மேலும் ராம் சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்து விடுமோ என்று பயப்படுகிறேன்'' என தெரிவித்தார்.
சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரணுக்கு க்ளின் காரா என்ற மகள் உள்ளார். மேலும் இரு மகள்களான சுஷ்மிதா, ஸ்ரீஜா ஆகியோருக்கும் தலா இரண்டு மகள்கள் உள்ளனர்.
பாலின பாகுபாடு மறைந்து ஆண், பெண் சமம் என உலகம் சென்று கொண்டிருக்கும் சூழலில் ஆண் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும், அவர்கள் தான் குடும்பத்தின் வாரிசு என்பது போன்று பேசியிருக்கும் சிரஞ்சீவியின் கருத்து சர்ச்சையாகி இருப்பதுடன் பலரும் வலைதளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.