பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

'யானைக்கும் அடி சறுக்கும்' என்பது பழமொழி. அது சினிமாவுக்கும் பொருந்தும். 1980களில் வெளியான 'ஆனந்த கும்மி' படத்தின் கதையை பாடலாசிரியர் வைரமுத்து எழுதியிருந்தார், இளையராஜா இசை அமைத்து, இளையராஜா பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தனது மனைவி ஜீவா இளையராஜாவை தயாரிப்பாளராக்கி படத்தை உருவாக்கினார்.
ஆனாலும் படம் படுதோல்வி அடைந்தது. காரணம் கதை அப்படி. கிராமத்து பண்ணையார் மகனும், அந்த பண்ணை வீட்டில் வேலை செய்யும் ஏழைத் தாயின் மகளும் சின்ன வயதில் இருந்தே நண்பர்கள், உரிய பருவம் வந்ததும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு நாயகனின் தந்தையும், நாயகியின் தாயும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். காரணம் இருவருக்கும் உள்ள கள்ள உறவு. அந்த உறவுப்படி இருவரும் அண்ணன், தங்கை என்பதால் இந்த எதிர்ப்பு. அதை மீறி காதலிப்பார்கள். இதனால் பெற்றோர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.
இந்த கதையை ரசிகர்கள் ஏற்கவில்லை. பாலகிருஷ்ணன் என்ற புதுமுகம் இயக்கி இருந்தார். பாலச்சந்திரன், அஸ்வினி என்ற புதுமுகங்களுடன் கவுண்டமணி, செந்தில், பேபி ஷாலினி, பசி நாராயணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
இந்த படம் இப்போது எங்கு இருக்கிறது என்று தெரியாது. ஆனால் படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடல்கள் மட்டும் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.சைலஜா பாடிய 'ஆனந்தகும்மி', ஜானகி, சைலஜா பாடிய 'ஒரு கிளி உருகுது'. இளையராஜா பாடிய 'திண்டாடுதே இரண்டு கிளியே..'. உள்ளிட்ட பாடல்கள்தான் அவை.




