ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. ஆந்திர மாநிலத்தில் செம்மரங்கள் கடத்தப்படுவதுதான் இப்படத்தின் கதை.
முதல் பாகத்தில் அரசியல் பின்னணி கொண்டவர்கள் அந்தக் கடத்தலில் ஈடுபடுவதைக் காட்டியிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் இரண்டாம் பாகத்தின் கதையும், கதாபாத்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம். அதில் ஒரு கதாபாத்திரம் 'துணை முதல்வர்' கதாபாத்திரம் என்கிறார்கள்.
தற்போது நடந்த ஆட்சி மாற்றத்தில் அல்லு அர்ஜூனின் உறவினரான பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 'புஷ்பா 2' படம் வெளிவந்த பின் வில்லன் கதாபாத்திரம் துணை முதல்வர் என்று இருந்தால் அது சர்ச்சையை ஏற்படுத்துமே என யோசித்திருக்கிறது படக்குழு. அதன் விளைவாக தற்போது கதாபாத்திரத்தை மாற்றுகிறார்களாம். அதனால்தான் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் என புதுத் தகவல் தெரிவிக்கிறது.
ஆந்திரத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒய்எஸ்ஆர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அல்லு அர்ஜூன் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனால், அவருக்கும் பவன் கல்யாணுக்கும் இடையே உரசல் என்பதுதான் ஆந்திர சினிமா, அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் ஒரு விஷயம். எனவே, 'புஷ்பா 2' விவகாரத்தில் மிகவும் கவனமாக இருக்கிறதாம் படக்குழு.