ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
மசாலா பிக்ஸ் சார்பில் இயக்குநர் கண்ணண் தயாரித்து, இயக்கும் படம் 'காந்தாரி'. தற்போது ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, கமர்ஷியல் கலந்த ஹாரர் டிராமாவாக 'காந்தாரி' படத்தை உருவாக்கி வருகிறார். ஹன்சிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மெட்ரோ ஷிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸட்ண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் நடித்துள்ளனர். எல்.வி.முத்து கணேஷ் இசையமைக்கிறார். படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
கண்ணன் கூறியதாவது : இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிஷங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.
ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என இரட்டை வேடத்தில், நடிக்கிறார். நரிக்குறவப் பெண்ணாக நடிப்பதற்காக சில பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவரது நடிப்பிற்குப் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.
இப்படத்திற்காகச் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் 60 லட்சம் ரூபாயில், ஒரு பிரம்மாண்டமான மலைக் குகை அமைத்து, 1943ல் நடக்கும் பிளாஷ்பேக் காட்சிகளைப் படமாக்கி உள்ளோம். படத்தின் முழுப்படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் நடக்கின்றன என்றார்.