நட்பா, துரோகமா ? - அழுத்தமாக மிரட்டும் 'கருடன்' டிரைலர் | முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்த அக்ஷய்குமார் | சின்னத்திரைக்கு வந்தார் வடிவேலு | கேன்ஸ் திரைப்பட விழாவில் தமிழ் நடிகரின் படம் | நான் இறந்த பிறகும் என் பேர் சொல்லும் படம் : கருணாஸ் நெகிழ்ச்சி | ஓட்டளித்த கர்ப்பிணி தீபிகா படுகோனே | சர்ச்சையை ஏற்படுத்திய பெங்களூரூ போதை பார்ட்டி | சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையம் : இளையராஜாவுடன் இணைந்து தொடக்கம் | ஐஸ்வர்யா ராய்க்கு விரைவில் கையில் ஆபரேஷன் | தங்கலான் படம் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் |
தயாரிப்பாளர் ஐசரி கணேசுடன் இணைந்து தயாரித்து பிரபுதேவா இயக்குவதாக இருந்த படம் கருப்பு ராஜா வெள்ளை ராஜா. இதில் கருப்பு ராஜாவாக விஷாலும், வெள்ளை ராஜாவாக கார்த்தியும் நடிப்பதாக இருந்தது. வனமகன் படத்தில் நடித்த சாயிஷா ஹீரோயின். இதன் துவக்க விழா நட்சத்திர ஓட்டலில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இந்தப் படத்தின் சம்பளத்தை நடிகர் சங்க கட்டிட நிதியாக வழங்கப்போவதாக விஷாலும், கார்த்தியும் மேடையிலேயே அறிவித்தனர்.
இந்தப் படத்தின் கதை மறைந்த இயக்குனர் சுபாஷின் கதை. கருப்பாக இருக்கிற ஒருவனும், வெள்ளையாக இருக்கிற ஒருவனும் ஒரு பெண்ணை காதலிக்கும்போது வருகிற பிரச்சினைகள் தான் கதை. விஷால், கார்த்தி இருவருமே கதையை கேட்டு நடிக்க ஒப்புக் கொண்ட பிறகுதான் துவக்க விழாவும் நடந்தது.
ஆனால் என்ன காரணத்தாலோ தெரியவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 3 நாட்கள் நடந்தது. அதன் பிறகு 3 மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு நடக்கவில்லை. விஷால் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கொடுத்திருந்த தேதிகளை சண்டக்கோழி இரண்டாம் பாகத்துக்கு கொடுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனால் பிரபுதேவா அப்செட்டாகி உள்ளதாக தகவல். படத்தை கிடப்பில் போட்டு விடலாமா... அல்லது வேறு ஹீரோக்களை வைத்து இயக்கலாமா... என படக்குழு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு சில நாளில் இது தொடர்பாக வெளிப்படையான தகவல்கள் வெளிவரும் என்று தெரிகிறது.