சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
முன்னணி பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக தனது சொந்த தொகுதியான இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் மண்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால் தானே தயாரித்து, நடித்து முடித்துள்ள 'எமெர்ஜன்சி' படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவுக்கு முழுக்க போட இருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
திரையுலகம் என்பது பொய், அங்குள்ள அனைத்தும் போலி. திரையுலகினர் யதார்த்த வாழ்க்கைக்கு மிகவும் மாறுபட்ட சூழலை உருவாக்குகிறார்கள். பார்வையாளர்களைக் கவரும் ஒரு போலியான பளபளப்பான உலகம் அது. கட்டாயத்தாலேயே நான் சினிமாவில் நடித்து வருகிறேன். நடிப்பதில் சலிப்பு ஏற்படும்போது நான் கதை எழுதத் தொடங்கினேன். படம் இயக்குவது, தயாரிப்பது என என்னை பிசியாக வைத்துக் கொண்டேன். இந்த தேர்தலில் நான் வெற்றி பெற்றால் எனது நேரம் முழுவதையும் மக்களுக்காக செலவிடுவேன். கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்து விட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்றார்.
கங்கனாவும் வெற்றி பெற்று மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால் கங்கனா மத்திய அமைச்சராவது உறுதி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.