ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவரது கையில் கட்டு போடப்பட்டிருந்தது. அந்த கட்டுடனேயே விழாவில் பங்கேற்றார். அந்த விழாவிற்கு சென்றபோது அவர் அணிந்திருந்த காஸ்டியூம் பெரிய அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்துவிட்டு மும்பை திருப்பி உள்ள ஐஸ்வர்யா ராய் இன்று நடைபெற்ற லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தார். மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இன்னும் சில தினங்களில் கையில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக பாலிவுட்டில் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த பிறகே அவர் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாவார் என்றும் கூறப்படுகிறது.