நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் |
பெங்களூருவின் புறநகர்ப் பகுதியான எலக்ட்ரானிக் சிட்டியில் அமைந்துள்ள ஒரு பார்ம் அவுஸில் நேற்று அதிகாலையில் சென்டிரல் க்ரைம் பிராஞ்ச் நடத்திய சோதனையில் அங்கு போதைப் பொருள் பார்ட்டி நடந்தது தெரிய வந்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபலம் அந்த பார்ட்டியை நடத்தியுள்ளார். அதில் தெலுங்கு சினிமா பிரபலங்கள், டிவி நடிகர்கள், நடிகைகள், மாடல்கள் என 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் 25 இளம் பெண்களும் இருந்துள்ளனர்.
ஞாயிறு இரவு ஆரம்பமாகி திங்கள் அதிகாலை வரையில் அந்த பார்ட்டி நடந்துள்ளது. பார்ட்டியை நடத்தியவர், மற்றும் போதைப் பொருள் கடத்திய மூவர், மேலும் ஐந்து பேர் என சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அந்த இடத்திலிருந்து போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஹேமா மற்றும் 'பீஸ்ட், வாரிசு, ஜெயிலர்' படங்களில் நடன இயக்குனராகப் பணியாற்றி ஜானி மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டதாக செய்திகள் பரவியது. மூவருமே தனித்தனியாக அது குறித்து மறுப்பும் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு, கன்னடத் திரையுலகங்களில் கடந்த சில வருடங்களாக போதைப் பொருள் பார்ட்டிகள் நடந்த விவகாரம் இன்னும் விசாரணையில் உள்ளது. சில முன்னணி நடிகர்கள் ஐதராபாத்தில் நடந்த விசாரணையில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்நிலையில் நேற்றைய பார்ட்டி விவகாரம் மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.