ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
நடிகர் கமல்ஹாசன், 'தக்லைப்' பட விழாவில் கன்னடம் தமிழிலிருந்து உருவானது என்று பேசியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, வருகிற ஐந்தாம் தேதி திரைக்கு வரும் 'தக்லைப்' படத்தின் பேனர்களும் கிழித்து எறிந்து வருகிறார்கள். இதன் காரணமாக கர்நாடகாவில் இந்த படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அந்த படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்கு தடை விதிப்போம் என்று அந்த மாநிலத்தின் அமைச்சர்களும் கூறி வருகிறார்கள். இப்படியான நிலையில், ''தமிழிலிருந்து கன்னட மொழி பிறந்ததாக கமல்ஹாசன் கூறியிருப்பது கர்நாடகா மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது. அதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொல்லி அங்குள்ள கன்னட அமைப்பின் நிர்வாகி பிரவீன் ரெட்டி என்பவர் பெங்களூரு ஆர்.டி காவல் நிலையத்தில் கமல்ஹாசன் மீது ஒரு புகார் அளித்துள்ளார். என்றாலும் அந்த புகார் அடிப்படையில் பெங்களூரு காவல் நிலையம் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்கிற தகவல்களும் வெளியாகி உள்ளன.