கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்த 'ரெட்ரோ' படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். அவருடன் திரிஷா, ஷிவதா, சுவாசிகா, நட்டி நடராஜன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், 'சூர்யா- 45வது படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் நிறைவடையப் போகிறது. மேலும் தற்போது படப்பிடிப்புக்கு நடுவே இறுதி கட்டப் பணிகளும் நடைபெற்று வருகிறது. அதனால் ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரங்களில் இருந்து இந்த படத்திற்கான அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும். முக்கியமாக இது செலிப்ரேஷன் படம் என்பதால் ஒரு பண்டிகை நாளில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இந்த படத்தின் டைட்டில் குறித்து தகவல் விரைவில் வெளியாகும்' என்கிறார் எஸ்.ஆர்.பிரபு.
படத்தை அக்டோபர் 1ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அதே தேதியில் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்களா அல்லது வேறு தேதியை முடிவு செய்வார்களா என்பது விரைவில் தெரிந்துவிடும்.