ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
அயோத்தி படத்தின் வெற்றிக்குப் பிறகு அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்து கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பத்தினர் இங்கு என்னென்ன பிரச்னைகளை சந்திக்கிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவான இந்த படம் பல திரைபிரபலங்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றதோடு, திரைக்கு வந்த மூன்றே வாரங்களில் 75 கோடி வசூலித்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் குறித்து சசிகுமார் கூறும்போது, ''இப்பட இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் எப்படி முதலில் கதை சொன்னாரோ, அதை அப்படியே படமாக்கி இருக்கிறார். அவர் சொன்னதை அப்படியே உள்வாங்கி நானும் நடித்தேன். அதனால்தான் இந்த படத்தின் மூலம் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்திருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர் அபிஷன் ஜீவிந்தும் இந்த படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருக்கிறார். அவர் நடித்த அந்த வேடம் இந்த படத்திற்கு உணர்வுப்பூர்வமான ஒரு பலத்தை கொடுத்தது'' என்கிறார் சசிகுமார்.