நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

ஆர்யா தயாரித்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நடித்தார் சந்தானம். சமீபத்தில் வந்த அந்த படம் ஹிட்டாகவில்லை. பெருமாளை விமர்சனம் செய்து பாடல் இருப்பதாக சர்ச்சை கிளம்ப, படத்துக்கும் பிரச்னை வந்தது. இந்நிலையில் இந்த படம் லாபமா? நஷ்டமா என்பதை ஆர்யா வெளிப்படையாக சொல்லவில்லை. கூட்டி கழித்து பார்த்தால் ஆர்யாவுக்கு நஷ்டம் என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையே 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' படத்தில் ஆர்யாவும், சந்தானமும் இணைந்து நடிக்கலாம். அந்த படத்தை ஆர்யா தயாரிக்கலாம் என்றும் பேச்சு எழுந்துள்ளது. கதை நாயகனாக நடித்து வந்த சந்தானம் இப்போது சிம்புவுடன் காமெடி வேடத்தில் நடிக்க இருப்பதால், 'பாஸ் என்கிற பாஸ்கரன் 2' படத்தில் ஆர்யாவுடன் 2வது ஹீரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சந்தானத்துக்கும் இப்போது பெரிய வெற்றி தேவைப்படுவதால் அந்த படம் உருவாக வாய்ப்பும் அதிகம். 'கருடன், மாமன், விடுதலை' படங்கள் வெற்றி அடைந்ததால், சந்தானம் மார்க்கெட்டை விட, சூரியின் மார்க்கெட் பெரிதாகிவிட்டது என்பது கூடுதல் தகவல்.