2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இந்தியில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் நடித்தபின் ராஷ்மிகா மந்தனா மார்க்கெட் எகிறிவிட்டது. இரண்டு படங்களும் பெரிய ஹிட் ஆக, அவருக்கு மவுசு கூடிவிட்டது. இந்நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க, ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 'டிராகன்' படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. இதுவரை எந்த படத்திலும் ஒரு பாடலுக்கு ஆடாத ராஷ்மிகா, அந்த பாடலுக்கு ஆட சம்மதித்துள்ளார். ஆனால், சம்பளமாக 10 கோடிக்கு மேல் கேட்பதால் சிக்கல் நீடிக்கிறதாம்.
அந்த படத்தில் ருக்மினி வசந்த், வித்யா பாலன் ஆகியோர் ஹீரோயின். இவர்கள் சம்பளம் சில கோடிகள் மட்டுமே. ஆனால் ஒரு பாடலுக்கு ஆட ராஷ்மிகா இவ்வளவு கேட்பதால் படக்குழுவும் யோசிக்கிறதாம். இதற்கிடையே படத்தின் பட்ஜெட் 350 கோடிமேல் என்பதால் ராஷ்மிகா கேட்கும் சம்பளத்தை கொடுக்க படக்குழு தயங்காது. அதில் அவர் ஆடுவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது தெலுங்கில் தனுசுடன் 'குபேரா' மற்றும் தீக் ஷித்ஷெட்டியுன் 'கேர்ள்பிரண்ட்' படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.