காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சசிகுமார், உன்னி முகுந்தன், சூரி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் 'கருடன்' படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியாகி உள்ளது.
'விடுதலை' படத்திற்குப் பிறகு சூரி கதையின் நாயகனாக நடிக்கும் படம் 'கருடன்'. சசிகுமார், உன்னிமுகுந்தன் இருவருமே சிறு வயதிலிருந்து நண்பர்களாக இருக்கிறார்கள். உன்னியிடம் வேலை பார்க்கும் முரட்டு விசுவாசி சூரி. நண்பர்கள் சசி, உன்னிக்கு இடையில் ஒரு கட்டத்தில் ஏதோ பெரிய மோதல் வெடிக்கிறது. அதில் தலையிடும் சூரி என்ன செய்கிறார் என்பதுதான் இந்த 'கருடன்' படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரைப் பார்த்து ஓரளவிற்குப் புரிந்து கொள்ள முடிகிறது.
முரட்டு விசுவாசி, அடியாள் என அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி. சசி, உன்னி இருவருமே நண்பர்களாக இருக்கிறார்கள். கிராமத்துப் பின்னணியில் சில சூழ்ச்சிகளைக் கொண்ட கதை எனத் தெரிகிறது.
படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். டிரைலரில் வடிவுக்கரசி, சமுத்திரக்கனி மட்டுமே மற்ற கதாபாத்திரங்களில் இடம் பெற்றுள்ளார்கள். ரேவதி சர்மா, ஷிவதா, ரோஷினி ஹரிப்ரியன், பிரிகடா என நான்கு ஹீரோயின்கள் படத்தில் இருக்கிறார்கள்.
டிரைலரில் யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை மிரட்டலாய் அமைந்துள்ளது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு தனி வண்ணத்தில் அமைந்துள்ளது. சண்டைக் காட்சிகளும், வசனங்களும் படத்தில் ஹைலைட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
மே 31ம் தேதி வெளியாக உள்ள இப்படம் சூரிக்கு 'விடுதலை' படத்தைப் போல மீண்டும் ஒரு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.