துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
இந்தியத் திரையுலகத்தில் அடுத்த சில மாதங்களில் சில முக்கியமான படங்கள் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ள அப்படங்களில் இரண்டு படங்கள் முக்கியமான பிரம்மாண்டப் படங்களாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கல்கி 2898 ஏடி படமும், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இந்தியன் 2' படமும்தான், அந்தப் படங்கள். இரண்டு படங்களிலுமே கமல்ஹாசன் இருக்கிறார் என்பது கூடுதல் ஸ்பெஷல்.
'கல்கி 2898 ஏடி' படம் ஜுன் 27ம் தேதி வெளியாகிறது. பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். 'இந்தியன் 2' படத்திற்கு முன்பாகவே கமல்ஹாசனுக்கு இப்படம் வருவதால் பான் இந்தியா அளவில் அவருக்கு கூடுதலாக ஒரு வரவேற்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ள 'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இரண்டு படங்களின் புரமோஷனையும் படக்குழுவினர் ஆரம்பித்துவிட்டார்கள். இரண்டு படங்களுமே 1000 கோடி வசூலைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் இருக்கிறது. எந்தப் படம் சாதிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.