5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மரணம் அடைந்த மதன்பாப் தனது சிரிப்பால் மட்டுமே 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். சினிமாவில் காமெடியனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் அவர் ஹீரோவாக இருந்தார்.
வட சென்னை பகுதியில் முன்பு பாப்புலராக இருந்த சார்பட்டா குத்துச்சண்டை பரம்பரையை சேர்ந்தவர். குத்துச் சண்டை பயிற்சி முடித்தவர்.
பின்னர் கானா இசை பக்கம் கவனம் செலுத்தியவர் மேடை கச்சேரிகள் நடத்த தொடங்கினார். தனக்கென ஒரு தனி இசைகுழுவை உருவாக்கி பல இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தினார். உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இவரது கச்சேரிகளில் கீ போர்ட் பிளேயராக பணியாற்றி உள்ளார். இவரது கச்சேரியில் பாடிக் கொண்டிருந்த இவரது மனைவி பாடகி சுசிலா இவரை தீவிரமாக காதலித்தார். தனது காதலை மதன்பாப்பிடம் சொன்னபோது அதனை அவர் ஏற்றுக் கொண்டார். ஆனால் இந்த காதல் விபரம் அறிந்த பெற்றோர் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள்.
மதன்பாப்பை தேடி வந்த அவரை உடனடியாக திருமணம் செய்து கொள்ள திருத்தணி முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு திருமணம் செய்து வைக்க மறுத்தார்கள். உடனே சாமி சிலை முன் நின்று கொண்டு தாலிகட்டி மனைவியாக ஏற்றுக் கொண்டு கடைசி வரை அவருடன் வாழ்ந்தார். அவரின் மகள் ஒருவரும் தற்போது பாடகியாக உள்ளார்.