100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் |
சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் புகழ். யோகி பாபு போன்றே இவரது ஹேர் ஸ்டைலும் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது. தற்போது சினிமாவில் காமெடி கேரக்டர்களில் நடித்து வருகிறார். அவர் கதையின் நாயகனாக நடித்த 'சூ கீப்பர்' படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் புகழ் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் பாடல் ஒன்றை முதல் முறையாக புகழ் பாடியுள்ளார். அவருடன் இணைந்து விருஷா பாலு, ஜகதீஷ் குமார் பாடியுள்ளனர். சுபாஷ் முனிரத்தினம் இசையமைத்துள்ளார். கலைக்குமார் பாடலை எழுதி உள்ளார். சாஜோ சுந்தர் படத்தை இயக்குகிறார்.