பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் காமெடி பண்ணிக்கொண்டிருந்த புகழ், சினிமாவிற்கு வந்து காமெடி ரோலில் நடித்தார். அடுத்து 'மிஸ்டர் ஷூ கீப்பர்' படத்தில் கதைநாயகன் ஆனார். இப்போது காமெடியன், கதை நாயகன் என இரண்டிலும் நடித்து வருகிறார்.
'அன்பேசிவம், கோகுலத்தில் சீதை, பகவதி' போன்ற படங்களை தயாரித்த லட்சுமி மூவீ மேக்கர்ஸ் இப்போது தயாரிக்கும் படத்திலும் புகழ் ஹீரோ. அந்த படத்துக்கு '4 இடியட்ஸ்' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது, லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் 27வது படம். சஜோசுந்தர் முருகேசன் இயக்குகிறார். திரில்லர் ஜானரில் இந்த படம் உருவாகி உள்ளது.
இது தவிர, 'அழகர்யானை' என்ற படத்திலும் புகழ் ஹீரோவாக நடித்து வருகிறார். புகழ் காமெடியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'தேசிங்குராஜா 2' படுதோல்வி அடைந்தது. அதில் பெண் வேடத்தில் நடித்த புகழ் காமெடிக்கு வரவேற்பு இல்லை. அதனால், அவர் கதைநாயகன் பாதைக்கு திரும்புவதாக தகவல்.