ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

தமிழ், மலையாள படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நவ்யா நாயர். திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் ஓணம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா நகருக்கு சென்றிருந்தார்.
மெல்போர்ன் விமான நிலையத்தில் அவரது உடமைகளை பரிசோதனை செய்த அதிகாரிகள் அவரது கை பையில் பூ இருப்பதை கண்டுபிடித்தனர். ஆஸ்திரேலிய சட்டப்படி விமானத்தில் பூ கொண்டு செல்லக்கூடாது என்பதால் அவருக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நவ்யா நாயர் கூறும்போது "நான் விமானம் ஏறும்போது, என்னுடைய தந்தை தலையில் வைப்பதற்காக பூ வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக்கி ஒன்றை தலையில் வைத்து மீதமுள்ள பூவை நான் கைப்பையில் வைத்திருந்தேன்.
மெல்போர்ன் விமானநிலையத்தில் இறங்கிய பின்னர் என்னுடைய கைப்பையை சோதனையிட்ட அதிகாரிகள், பூ வைத்திருந்த குற்றத்திற்காக எனக்கு 1980 டாலர் (இந்திய மதிப்பில் 1.14 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்தனர். விமானத்தில் பயணம் செய்யும்போது கைப்பையில் பூ கொண்டு வரக்கூடாது என்பது இங்குள்ள சட்டம் என்று எனக்குத் தெரியாது.
வெறும் ஒரு முழம் பூவுக்காக எனக்கு இவ்வளவு ரூபாய் அபராதம் விதித்துவிட்டனர். தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதான். 28 நாட்களுக்குள் அபராதத்தை கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் என்னிடம் கூறியுள்ளனர். இதை நான் சொல்வதற்கு காரணம் மற்றவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்றார்.




