10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

விஜயகாந்த் கேரியரில் மிக முக்கியமான படம் 'ஊமை விழிகள்'. அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய இந்தப் படம் அன்றைய சினிமா டிரண்டிங்கையே மாற்றியது. 1986ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜயகாந்துடன் அருண் பாண்டியன், பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், கார்த்திக், சரிதா, இளவரசி, விசு உள்ளிட்ட பலர் நடித்தார்கள்.
ஆபாவாணன் தயாரித்தார், அரவிந்த்ராஜ் இயக்கினார். மனோஜ் கியான் இசை அமைத்திருந்தார், ரமேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இவரது ஒளிப்பதிவு அப்போது வெகுவாக பாராட்டப்பட்டது. படமும் பெரிய வெற்றி பெற்றது.
39 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் தற்போது மறு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஜெய் மோகா பிலிம்ஸ் சார்பில் ஆர்.ஜெயராமன் என்பவர் வெளியிடுகிறார். ஏற்கெனவே விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்' படமும் மறுவெளியீட்டுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.