'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் | சினிமாவிலும் 8 மணி நேர வேலை: ராஷ்மிகா வலியுறுத்தல் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் வெளிவந்த 'காந்தாரா சாப்டர் 1' படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அப்படம் ஹிந்தி தவிர மற்ற தென்னிந்திய மொழிகளில் நாளை ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மலையாளத்தில் 300 கோடி வசூலித்த 'லோகா' படமே எட்டு வார இடைவெளிக்குப் பிறகுதான் ஓடிடியில் வருகிறது. ஆனால், 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்த 'காந்தாரா சாப்டர் 1' படத்தை நான்கு வாரங்களில் ஏன் வெளியிடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.
படத்தை ஆரம்பிப்பதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே இப்படத்திற்கான ஓடிடி உரிமையை விற்றுள்ளார்கள். அப்போது போட்ட ஒப்பந்தத்தின்படி நான்கு வாரங்களில் ஓடிடியில் வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம். அந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து மாற்ற முடியாததால் நான்கு வாரங்களில் வெளியிடுகிறார்களாம். இருந்தாலும் தியேட்டர் வசூல் பாதிக்கப்படாது என்றே நம்புகிறார்கள்.