மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் | 'சக்தித் திருமகன்' கதைத் திருட்டு சர்ச்சை : இயக்குனர் விளக்கம் | 8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா? | 'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' |

'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு யஷ் நடித்து வரும் கன்னடத் திரைப்படம் 'டாக்சிக்'. இப்படம் ஒரே சமயத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ஹிந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். படத்தின் வெளியீடு 2026 மார்ச் 19 என தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
ஆனால், இப்படம் மேலும் தள்ளிப் போகும் என்றும், இயக்குனர் கீது மோகன்தாஸ், யஷ் இடையே கருத்து மோதல், அதனால் யஷ் படத்தை இயக்கி வருகிறார் என்றும் ஒரு சர்ச்சை பரவியது.
இந்நிலையில் எக்ஸ் தளத்தில் பிரபல இன்புளுயன்சர் ஒருவர் படம் குறித்த அப்டேட்ஸ் சிலவற்றைக் கொடுத்திருந்தார். அதை மறுபதிவு செய்த தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ், “இன்னும் 140 நாட்கள் உள்ளது,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் பரவியுள்ள சர்ச்சைகளுக்கு அந்நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த நிறுவனம்தான் விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தையும் தயாரித்து வருகிறது.