மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் | 'சக்தித் திருமகன்' கதைத் திருட்டு சர்ச்சை : இயக்குனர் விளக்கம் | 8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா? | 'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? |

நடிகர் மோகன்லாலின் குடும்பத்தில் அவரது மகன் பிரணவ், இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பிறகு டைரக்ஷனில் நுழைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹீரோவாக மாறி படங்களில் நடித்து வருகிறார். அதேபோல படிப்பில் கவனம் செலுத்தி வந்த மோகன்லாலின் மகள் விஸ்மாயாவும் எதிர்பாராத திருப்பமாக சினிமாவில் நடிகையாக நுழைந்துள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு '2018' என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் 'தொடக்கம்' என்கிற படத்தில் அவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
கடந்த ஜூலை மாதமே இது குறித்து அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் துவக்க விழா, பூஜையுடன் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் மோகன்லால், அவரது மனைவி சுசித்ரா மற்றும் மகன் பிரணவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த படத்தையும் மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே தயாரிக்கிறது.
இந்த நிகழ்வின்போது பேசிய மோகன்லால், “என் வாழ்க்கையில் எல்லாமே நான் எதிர்பாராத விதமாக அதிசயமாகத்தான் நடைபெற்று வருகிறது. அதனால் தான் என் மகளுக்கு விஷ்மாயா என்று பெயர் வைத்தேன். நான் சினிமாவிற்கு வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஒரு நடிகனானேன். அதேபோல என் மகளும் ஒரு நடிகராகவர் என்று எதிர்பார்க்கவில்லை. அவரும் நடிகர் ஆகிவிட்டார். இப்போது என் மகளும் அதேபோல இந்த துறையில் நடிகையாக அறிமுகமாகிறார்.
ஒரு நல்ல கருத்தம்சம் கொண்ட கதை தேடி வந்தபோது இதைவிட அவரை அறிமுகப்படுத்திவதற்கு சரியான நேரம் எதுவும் இருக்காது. சினிமாவில் என் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் இல்லை. என்னை சுற்றியுள்ள வழிகாட்டிகளும் நண்பர்களும் தான். அதேபோல என் பிள்ளைகளுக்கும் அப்படி அமைய வேண்டுமென விரும்புகிறேன்” என்று பேசினார்.