போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக இருந்து கதையின் நாயகனாக உயர்ந்திருப்பவர் சூரி. வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்திற்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூரி அடுத்து கதையின் நாயகனாக நடித்துள்ள படம் 'கருடன்'. ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சசிகுமார், உன்னி முகுந்தன் மற்றும் பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நாளை(மே 21) சென்னையில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ள உள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் தனி கதாநாயகனாக நடித்து முதல் வெற்றியைப் பெற்ற 'எதிர்நீச்சல்' படத்தை இயக்கியவர்தான் துரை செந்தில்குமார். அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மற்றொரு படமான 'காக்கி சட்டை' படமும் வெற்றி பெற்ற படம்தான்.
விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவருமே நாளை ஒன்றாகக் கலந்து கொள்ளும் விழா என்பதால் 'கருடன்' இசை வெளியீட்டு விழா முக்கியத்துவம் பெறுகிறது.