'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் தமிழா என்கிற ஆதி 2017ல் வெளிவந்த 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அந்தப் படமும் அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'நட்பே துணை' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதன்பின்அவர் நடித்து வந்த 'நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், வீரன்' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வரவேற்பையும், வெற்றியையும் பெறவில்லை. இடையில் ஓடிடியில் 'அன்பறிவு' என்ற படமும் வெளிவந்தது.
கதாநாயகனாக கடந்த ஐந்து வருடங்களாகவே அடுத்த வெற்றிக்காகப் போராடி வருகிறார் ஆதி. அவர் தற்போது நாயகனாக நடித்துள்ள 'பி.டி சார்' படம் இந்த வாரம் மே 24ம் தேதி வெளியாகிறது. ஒரு ஆக்ஷன் படமாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த 'பி.டி சார்' படம் மூலம் ஆதி வெற்றிக் கோட்டை தொடுவார் என்ற நம்பிக்கை படக்குழுவிற்கு உள்ளது.
இந்த வாரம் இப்படத்துடன் மே 24ல், “பகலறியான், பூமரக் காத்து, 6 கண்களும் ஒரே பார்வை” ஆகிய படங்களும் மே 23ல் 'சாமானியன்' படமும் வெளியாக உள்ளது.