அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பார்வதி , மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்க வயல் சுரங்கம் பின்னணியில் வாழ்ந்த தமிழர்கள் வாழ்வை மையமாக வைத்து உருவாகி உள்ளது.
ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முடிவடைந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ரிலீஸ் தேதி அறிவித்து ஒரு சில காரணங்களால் படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை. இன்னும் புதிய ரிலீஸ் தேதியையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தங்கலான் படத்தை இப்போது வருகின்ற ஜூன் 20ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.