ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
56 வயதான அக்ஷய் குமார், பாலிவுட்டின் முன்னணி நடிகர். கடந்த 30 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்திய சினிமாவின், இந்தியாவின் முகமாக பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட அக்ஷய்குமார் இப்போதுதான் முதன் முறையாக தேர்தலில் ஓட்டளித்துள்ளார்.
அதற்கு காரணம் அவர் கனடா நாட்டு குடியுரிமை பெற்றவராகத்தான் இத்தனை ஆண்டுகள் இருந்துள்ளார். 'ஒர்க்கிங் பெர்மிட்' மூலம்தான் அவர் இந்தியாவில் வாழ்ந்து வந்தார். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இதனால் இந்திய குடியுரிமையை கடந்த ஆண்டு அவர் பெற்றார். அதனை கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். தற்போது அவர் நடைபெற்று வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “நமது இந்தியா வளர்ச்சி அடைந்து வலுவானதாக இருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அதை மனதில் வைத்தே நான் ஓட்டளித்தேன். ஒவ்வொருவரும் தங்களுக்கு யார் சரியானவர் என்ற எண்ணம் வந்தால் அவர்களுக்கு ஓட்டளிக்கலாம். ஓட்டுப்பதிவு சதவீதம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன். நான் ஓட்டு போட்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்” என தெரிவித்தார்.