பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் |
நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராமாயணா'. இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த மது மந்தெனா அதிலிருந்து விலகினார். அதோடு, படத்தின் மொத்த உரிமையும் தங்களிடம்தான் உள்ளது. அதனால், படத்தைத் தொடரக் கூடாது என அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இதனிடையே, கடந்த வாரம் மீண்டும் ஆரம்பமான 'ராமாயணா' படப்பிடிப்பு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது என மும்பை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மது மந்தெனாவின் காப்பிரைட் வழக்கு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்த பின்பு படப்பிடிப்பை நடத்த உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அதே சமயம் ரன்பீர் தேதிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைத்துள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி உள்ளது.
ராமராக ரன்பீரும், சீதையாக சாய் பல்லவியும், இராவணனாக யஷ் நடிக்கும் இந்த 'ராமாயணா' படத்தை இரண்டு பாகங்களாகத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்கள்.