பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
பொங்கலுக்கு விஜய்யின் பைரவா படம் வெளியாவது உறுதியாகி விட்டது. அப்படத்துடன் பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக, புரியாத புதிர், புரூஸ்லீ என சில படங்களும் வெளியாகயிருந்தது. ஆனால் அண்ணனுடன் வருகிறோம் என்று கூறிவந்த ஜி.வி.பிரகாஷ், திடுதிப்பென்று தனது புரூஸ்லீ படத்தை பொங்கலுக்கு பிறகு வெளியிட முடிவெடுத்து விட்டார். அதேசமயம், பொங்கல் அன்று தான் நடித்துள்ள இன்னொரு படமான அடங்காதே படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், ஏற்கனவே பொங்கலுக்கு வரலாமா? என்று நினைத்து பின்னர் விஜய் படம் வருவதால் அதுபற்றிய பேச்சே எடுக்காமல் ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கும் ஜெயம்ரவியின் போகன் படத்தின் ட்ரெய்லர் இப்போது விஜய்யின் பைரவா படத்தின் இடைவேளையின்போது வெளிவருவதாக கூறப்படுகிறது. இந்த பப்ளிசிட்டியைத் தொடர்ந்து இம்மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் போகன் படம் திரைக்கு வர இருப்பதாக சொல்கிறார்கள்.