காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
மலையாள சினிமாவில் சமீபத்தில் அறிமுகமான ஆதியா பிரசாத் தமிழுக்கு வருகிறார். குஞ்சாகோ போபன் நடித்த 'நிழல்' படத்தின் மூலம் பிரபலமான ஆதியா, அங்கு ஒரு சில படங்களில் நடித்த நிலையில் தமிழுக்கு அறிமுகமாகிறார். 'ஜோஸ்வா இமை போல் காக்க' படத்தில் வில்லனாக நடித்த கிருஷ்ணா மீண்டும் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த படத்தை ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நஞ்சுண்டப்பா ரெட்டி தயாரிக்கிறார். படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்ஷன் நம்பர் 1' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த திரைப்படம் காமெடி, பேண்டஸி மற்றும் திகில் ஜானரில் உருவாக இருக்கிறது. இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ள துரை சரவணன் இயக்குகிறார்.
புதுமுக நடிகராக சந்தோஷ் வில்லனாக அறிமுகமாகிறார். இவர்களோடு மாறன், இமான் அண்ணாச்சி, ஆதித்யா கதிர், சாம்ஸ், இயக்குநர் ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிக்க உள்ளனர். எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது.