ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ரியோ ராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜோ'. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மனோஜ் நடித்திருந்தார். இந்த ஜோடி மீண்டும் அடுத்த படத்தில் இணைந்துள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமி தயாரிக்கிறர். புதுமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்குகிறார்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, சித்துகுமார் இசை அமைக்கிறார். ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் கலையரசன் கூறும்போது, ‛‛திருமணமான ஆண்களின் பிரச்னைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப்போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும்'' என்றார்.