பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தியின் வாழ்க்கை பல திரைப்படங்களாக ஏற்கனவே தயாராகி உள்ளது. நூற்றுக் கணக்கான ஆவணப் படங்கள் வெளிவந்துள்ளது. ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய 'காந்தி' படம்தான் இதில் முதன்மை வகிக்கிறது. 8 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஹாலிவுட் படம் இது.
இந்த நிலையில் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு வெப் தொடராக தயாராக உள்ளது. இந்த தொடரில் காந்தி வேடத்தில் பிரதிக் காந்தி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் வெளிநாட்டு நடிகர்கள் பலர் நடிக்க உள்ளனர். அந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
'ஹாரிபாட்டர்' படத்தில் நடித்து புகழ்பெற்ற டாம் பெல்டன், காந்தி வாழ்க்கை தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஹாலிவுட் நடிகர்களான ஜோன்னோ டேவிஸ், சைமன்லெனான், லிபி மாய், மோலி ரைட், ரால்ப் அடேனி, ஜேம்ஸ் முர்ரேன், லிண்டன் அலெக்சாண்டர் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த தொடரை ஹன்சல் மேத்தா டைரக்டு செய்கிறார். இது பற்றி அவர் கூறும்போது, “காந்தி தொடரில் திறமையான நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சர்வதேச அளவில் தொடரை கொண்டு செல்லவே இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். லண்டன், தென்னாப்பிரிக்காவில் காந்தி வளர்ந்தது உள்பட இதுவரை யாரும் அதிகம் அறியாத விஷயங்கள் தொடரில் இருக்கும். இந்த தொடரை இயக்குவது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.