பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் கௌதம் வி.ஆர்., பி.வாசுவின் தம்பி மகனான இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் '7 நாட்கள்'. இப்படத்தில் இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்திவேல் வாசு ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிகிஷா பட்டேல், அங்கனா ராய் நடிக்கிறார்கள். இப்படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 26 வருடங்களுக்குப் பிறகு பிரபுவும் சக்திவேல் வாசுவும் இணைந்து இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அதாவது பிரபு நடித்த சின்ன தம்பி படத்தில் சிறு வயது பிரபுவாக நடித்தது சக்திவேல் வாசுதான்.
தற்போது கதாநாயகனான பிறகு 7 நாட்கள் படத்தில் பிரபு உடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்தின் பூஜை ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கி உள்ளது. 'மில்லியன் டாலர் மூவீஸ்' நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கும் கார்த்திக், பி.வாசுவின் தம்பி. இவர்தான் இப்படத்தின் கதாசிரியர். இயக்குநர் கௌதம் வி.ஆர். உடைய அப்பாதன் இவர்.