நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? | அபிநட்சத்திரா நடிக்கும் அன்னம் தொடரின் புரோமோ ரிலீஸ் | கார்த்திகை தீபம் சீரியலிலிருந்து விலகிய அயுப் | பிளாஷ்பேக் : 3 இயக்குனர்கள் இயக்கிய புராண படம் | பிளாஷ்பேக் : ஹீரோயின் ஆக நடித்த டி.ஏ.மதுரம் | கோவா திரைப்பட விழாவில் தமிழ் குறும்படம் | 110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை | முதல்வர் குடும்ப திருமணத்தில் தனுஷ், நயன்தாரா : முகத்தை திருப்பிக் கொண்டு வெறுப்பை காட்டினர் |
தனியார் அமைப்பு ஒன்றின் சார்பாக 'நமது மாஸ்டர் நமது முன்னாடி' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நடன இயக்குனர் பிரபு தேவாவிற்கு அர்ப்பணிக்கும் விதமாகவும், அவரது 100 பாடல்களுக்கு 5000க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் நடன கலைஞர்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை படைக்க இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதற்காக சிறுவர்களிடம் குறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நேற்று காலை 6 மணிக்கு நிகழ்ச்சியை தொடங்கி 7.30 மணிக்குள் முடிக்கப்படும் என்று கூறியிருந்தனர். இதனால் அதிகாலை முதலே குழந்தைகள் ஸ்டேடியத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால், திட்டமிட்டபடி 6 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கவில்லை. காலை 9 மணியாகியும் நிகழ்ச்சி தொடங்கவில்லை. கடும் வெயிலில் வெட்டவெளி மைதானத்தில் சோர்வாக இருந்த சிறுவர், சிறுமிகளை பார்த்த பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் பிரபுதேவா வர மாட்டார் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூற சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டு பேசிய பிரபுதேவா, உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி. என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். விரைவில் உங்களை சந்திப்பதற்கு நிச்சயம் முயற்சிக்கிறேன்'' என்றார்.