அக்., 5ல் ‛லியோ' டிரைலர் வெளியீடு | வாழை படத்தை எதிர்பார்க்கும் திவ்யா துரைசாமி | 'லியோ' வெளியீட்டிற்குப் பிறகு 'விஜய் 68' பூஜை புகைப்படங்கள் | சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம் | ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங் | ‛சித்தா' மிகச்சிறந்த சினிமா : கோவையில் சித்தார்த் நம்பிக்கை | விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம் | ஒன் டூ ஒன் முதல் பார்வை வெளியீடு | ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் |
நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா நடித்து சமீபத்தில் வெளிவந்த எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் அடுத்த புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். எஸ்.ஜே.சீனு இயக்கும் இந்த படத்திற்கு ‛பேட்ட ராப்' என்று தலைப்பு வைத்துள்ளனர். பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் இடம் பெற்ற பாடலை வைத்து இந்த தலைப்பை வைத்துள்ளனர். நாயகியாக வேதிகா நடிக்கிறார். காஞ்சனா 3 படத்திற்கு பின் இந்த படத்தில் இவர் நாயகியாக நடிக்கிறார். ரியாஸ் கான், மைம் கோபி, பக்ஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூன் மாதம் 15ம் தேதி முதல் துவங்குகிறது. விரைவில் முறையான அறிவிப்பு வெளியாக உள்ளது.