தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

தெலுங்கில் உருவாகி உள்ள வெப்சீரிஸ் 'யக்ஷினி'. இதில் யக்ஷினி என்ற டைட்டில் ரோலில் வேதிகா நடித்துள்ளார். அவருடன் ராகுல் விஜய், லக்ஷ்மி மஞ்சு, அஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேஜா மர்னி என்பவர் இயக்கியுள்ளார். ஓடிடியில் வெளியாகி உள்ளது. தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் இதனை காணலாம்.
குபேரனிடம் சாபம் வாங்கும் மாயா எனும் யக்ஷினி அந்த சாபத்தில் இருந்து விமோச்சனம் அடைய வேண்டும் என்றால் 100 ஆண்களுடன் உறவு கொண்டு பின்னர் அவர்களை கொலை செய்ய வேண்டும். 99 பேரை கொல்லும் யக்ஷினி கடைசியாக 100வது ஆளாக ஹீரோவை சந்திக்கும் போது அவர் மீது காதல் வயப்படுகிறார். சாப விமோசனமா, காதலா இதில் யக்ஷினி என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் தொடரின் கதை.
இந்த தொடர் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வேதிகாவின் நடிப்பை எல்லோரும் பாராட்டி வருகிறார்கள். இதுகுறித்து வேதிகா கூறும்போது “அதிக சக்தி வாய்ந்த கேரக்டரில் நடிக்கும்போது கூடுதல் பொறுப்பு இருக்கும். இந்தக் கேரக்டர் நீண்ட நேரம் உருவானாலும், படப்பிடிப்பின்போது என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நேரம் கிடைக்கவில்லை. யக்ஷினி கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, எனக்கு உடல்ரீதியாக மிகப்பெரிய சவாலாக இருந்தது. மேக்கப் அணிந்து கலைக்க பல மணி நேரமானது. ஆனால், நான் செய்த முயற்சிகள் அனைத்துக்கும் இப்போது பாராட்டுகள் கிடைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.