டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் |
விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமான ‛பீனிக்ஸ்' பெரிதாக வெற்றி பெறவில்லை. சில செயல்பாடுகளால் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்தனர். இப்போது அதிலிருந்து அவர் மீண்டுவிட்டார். அடுத்தபடம் குறித்து இன்னமும் முடிவெடுக்காமல் இருக்கிறாராம். இதற்கிடையே, எனக்கு நடிப்பில் மட்டுமல்ல, படம் டைரக்ஷன் பண்ணுவதிலும் ஆர்வம் இருக்கிறது. முறைப்படி டைரக்ஷன் கோர்ஸ் படித்து இருக்கிறேன். சில குறும்படங்களை இயக்கி இருக்கிறேன் என்று சூர்யா சேதுபதி கூறி வருவதால் அவர் அடுத்து படம் இயக்கலாம் என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியே தயாரிப்பாளர் ஆகவும் இருப்பதால், ஆரஞ்சுமிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை போன்ற படங்களை தயாரித்து இருப்பதால் மகன் இயக்கும் படத்தை தயாரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேப்போல் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த கருணாஸ் மகன் கென்னும் இப்போது இயக்குனர் ஆகிவிட்டார். ஒரு படத்தை இயக்குகிற வேலைகளில் பிஸியாக இருக்கிறார். விஜய் மகன் ஜேசனும் படம் இயக்கி வருகிறார்.