'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் |

சபரீஷ் நந்தா இயக்கத்தில் வசந்த ரவி நடித்த இந்திரா படம் நாளை ரிலீஸ் ஆகிறது. ஒரு கண் பார்வையற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சீரியல் கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது கதை என்று கூறப்படுகிறது. அந்த சீரியல் கில்லராக தெலுங்கு நடிகர் சுனில் நடிக்கிறார்.
ஆனால் படக்குழுவோ 'இது மட்டுமே கதை இல்லை. திரில்லர் கதை என்பதால் ஹீரோ, வில்லன் கேரக்டரில் ஏகப்பட்ட சஸ்பென்ஸ் இருக்கிறது. இன்னும் சில கேரக்டர் இருக்கலாம். ஆகவே படம் பார்ப்பவர்கள் முக்கியமான விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். விமர்சனங்களில் சஸ்பென்ஸ் விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம்' என்கிறது.
ஹீரோயின் மெஹ்ரீனும் ‛என் கேரக்டர் பற்றி விரிவாக பேச முடியாது. அதில் கதை ஒளிந்து இருக்கிறது' என்கிறார்.




