பிளாஷ்பேக்: முதல் பெண் இயக்குனரின் புரட்சிகர படம் | 2025 பொங்கல் போட்டியில் அப்பா, மகன்? | தனது முந்தைய வசூலை முறியடிப்பாரா 'வேட்டையன் ' ரஜினிகாந்த் | 'வேட்டையன்' படமே கடைசி : வீடுகளாக மாறப் போகும் உதயம் தியேட்டர் | 'தேவரா' வசூல், வரவேற்பு : வருத்தத்தில் என்டிஆர் | குறைந்து போன ஓடிடி, சாட்டிலைட் உரிமை விற்பனை | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் மிஷ்கின் | இயக்குனர் ஆனார் பிரபல படத்தொகுப்பாளர் | பிளாஷ்பேக் : ‛டேய் இது இங்கிலீஷ் குரூப்புடா...' - பொன்மனச் செல்வன் படப்பிடிப்பில் விஜயகாந்த் கலாட்டா | தன் பெயரில் பண மோசடி விளம்பரம் : பாடகி சித்ரா எச்சரிக்கை |
பிரியா இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அசோக் செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன் ஒன்று கண்டேன்'. இப்படம் நேரடியாக டிவியில் வெளியாகும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த டிவி நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டது.
அதற்கு 'ஷாக்கிங்' என அதிர்ச்சியாகி ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருந்தார் படத்தின் நாயகர்களில் ஒருவரான வசந்த் ரவி. “டிவியில் வெளியாகும் என்ற ப்ரோமாவைப் பார்த்த போது மிகவும் வலியாகவும், மன வருத்தமாகவும் இருந்தது. இந்தப் படம் சம்பந்தப்பட்டவர்களுடனோ, அசோக் செல்வன், ஐஸ்வர்ய லட்சுமி, யுவன், இயக்குனர் ப்ரியா உள்ளிட்டவர்களுடன் இது பற்றி எதுவுமே தெரிவிக்கவில்லை. இப்படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்தோம். எங்கள் ஒட்டு மொத்த குழுவுக்கும் இது பற்றி முற்றிலும் தெரியாது, எதுவுமே எங்களிடம் சொல்லப்படவில்லை.
ஒரு படைப்பாளியோ அல்லது கலைஞர்களோ உங்கள் வியாபார முடிவுகளில் கருத்து கூற முடியாது. ஆனால், குறைந்தபட்சம் அது பற்றி அவர்களுக்கு நீங்கள் தெரிவித்திருக்க வேண்டும். எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மூலம் தெரிவித்திருக்கக் கூடாது,” என கோபத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது பதிவை ரிபோஸ்ட் செய்து நடிகர் விஷ்ணு விஷால் கூட அவரது ஆதரவைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'பொன் ஒன்று கண்டேன்' படம் ஏப்ரல் 14ம் தேதி ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வீடியோவை நேற்று பதிவிட்டிருந்தார் வசந்த் ரவி.
இரண்டு வாரங்களுக்கு முன்பு 'ப்ரோமோ' வெளியானது குறித்து 'ஷாக்கிங்' எனப் பதிவிட்டவர் நேற்று அப்படியே 'ஆப்' ஆகி அதன் 'ப்ரேமோஷன்'ஐ ஆரம்பித்துவிட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்ட விஷ்ணு விஷால் தான் பாவம்.