ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தமிழ் சினிமாவில் 'தும்பா' என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன். அதன் பிறகு 'கண்ணகி' என்ற படத்தில் நடித்தவர், 'ப்ளூ ஸ்டார்' படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து அந்த படத்தில் நடித்த போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு அப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் கீர்த்தி பாண்டியன் அளித்துள்ள ஒரு பேட்டியில், தனது கணவர் அசோக் செல்வன் பற்றி கூறுகையில், ''மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல மனதை கொண்டவர். சொந்த வாழ்க்கையோ, சினிமா துறையோ, எதுவாக இருந்தாலும் உண்மையாக இருப்பார். மன உறுதியுடன் செயல்படுவார். அதோடு வீட்டில் இருக்கும் போது கிச்சனுக்குள்ளும் புகுந்து விடுவார். சமைப்பது, பாத்திரங்கள் கழுவுவது என நான் செய்யும் அனைத்து வேலைகளையும் அவரும் எடுத்துக் கொண்டு செய்வார். அந்த அளவுக்கு பெண்களை மதிக்கக்கூடிய ஒரு நல்ல மனம் கொண்டவர் அசோக் செல்வன்,'' என்று தனது கணவரை பெருமையாக கூறியுள்ளார் கீர்த்தி பாண்டியன்.




