பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் 'ராஜாவின் பார்வையிலே' என்ற படத்தில் விஜய் நாயகனாக நடிக்க, இரண்டாவது ஹீரோவாக அந்த படத்தில் நடித்திருந்தார் அஜித். அதன் பிறகு ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே தமிழ் சினிமாவில் முக்கிய ஹீரோக்கள் ஆகிவிட்ட நிலையில், எதிரும் புதிருமான போட்டியாளர்களாக இருந்தார்கள்.
இதன் காரணமாக விஜய் படங்கள் வெளியாகும் போது அஜித் ரசிகர்களும், அஜித் படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்களும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டே வந்தார்கள். ஆனால் தற்போது தனது 69வது படத்தோடு விஜய் அரசியலுக்கு செல்லபோவதால் இதுவரை அவருக்கு எதிராக கருத்து பதிவிட்ட அஜித்தின் ரசிகர்கள், இப்போது அவரை பெருமைப்படுத்தும் வகையில் கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.
அதை போன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த 'தி கோட்' படத்தில் அஜித்தின் வசனத்தை விஜய் பேசி நடித்திருந்த நிலையில், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தான் நடித்து வரும் 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் பிரபலமான வசனம் ஒன்றை தான் பேசி நடிக்கிறாராம் அஜித் குமார். என்னதான் தொழில் ரீதியாக இருவரும் போட்டியாளராக இருந்த போதும், தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்பதால் விஜய் மீதான தனது அன்பை வெளிப்படுத்தும் வகையில் இப்படி அவரது வசனத்தை தான் பேசி நடிக்கப் போகிறாராம் அஜித் குமார்.