லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் முன்னணி நடன இயக்குனராக இருக்கும் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் காரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமாவில் நடனப் பெண்ணாக இருப்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு காரணமாக தெலுங்கு, தமிழ் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலையாளத் திரையுலகத்தில் ஹேமா கமிட்டி ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்திலும் அது போன்ற கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என குரல் எழுந்தது. இந்நிலையில் ஜானி மாஸ்டர் பற்றிய புகார் தெலுங்குத் திரையுலகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்த ஜானி மாஸ்டர் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அவரை உடனடியாக கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.