தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். அதன் பின்னர் அவரது இயக்கத்தில் வெளியான ‛ஆடை, குலு குலு' ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
‛மாஸ்டர், லியோ, விக்ரம்' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியவர் தற்போது ‛சர்தார் 2, கராத்தே பாபு' ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை எழுதியுள்ளார்.
நீண்ட நாட்களாக இவர் இயக்கும் படம் குறித்து எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று ரத்னகுமார் அவரது சமூக வலைதள பக்கத்தில் கையில் மைக் உடன் ஒரு போட்டோவை பகிர்ந்திருந்தார்.
தற்போது இது குறித்து நமக்கு கிடைத்த தகவலின் படி, ரத்னகுமார் அடுத்து கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் என இரு நிறுவனங்களின் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகனாக ரெட்ரோ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது என்பவர் நடிக்கிறாராம். இப்போது இதன் படப்பிடிப்பு சென்னை சிட்டி சென்டரில் நடைபெற்று வருகிறது.