டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் | பிளாஷ்பேக் : பாதை மாறி தோற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் | பிளாஷ்பேக் : சின்ன படம், பெரிய வெற்றி: 80 ஆண்டுகளை நிறைவு செய்த 'ஹரிதாஸ்' |
கடந்த 2020ம் ஆண்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கம், நடிப்பில் நயன்தாரா நடித்து திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் ‛மூக்குத்தி அம்மன்'. அதையடுத்து ஆர்ஜே பாலாஜி இந்த படத்தின் இரண்டாம் பாகமாக மாசாணி அம்மன் என்ற பெயரில் திரிஷாவை வைத்து ஒரு படத்தை இயக்க போவதாக தகவல் வெளியானது.
அதேசமயம் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் நயன்தாரா நடிப்பதாக வேல்ஸ் பிலிம் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2வை சுந்தர். சி இயக்குவதாக இன்று(செப்., 16) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இப்படத்தில் ஆர்ஜே பாலாஜி பணியாற்றவில்லை என தெரிகிறது.