‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நீண்ட வருட காதலரான ஆண்டனி என்பவரை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் திரைப்படங்களில் நடிப்பாரா என பலரின் கேள்வியாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்கும் எண்ணத்தில் தான் அவர் உள்ளார்.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் புதிதாக தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் அசோக் செல்வன் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். இப்படத்தை புதுமுகம் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.