இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் |

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் நடித்து வரும் விமல் தற்போது காளி அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஓம் காளி ஜெய் காளி' என பெயரிட்டுள்ளனர். அவருடன் சீமா பிஸ்வாஸ், ஆர்எஸ் சிவாஜி, ஜிஎம் குமார், குமரவேல், கஞ்சா கருப்பு, புகழ், பாவ்னி, ஷிவின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன், பழிவாங்குதல் தொடர்பான கதையில் இப்படம் உருவாகி உள்ளது. குலசேகரபட்டினத்தில் நடந்த தசரா திருவிழாவில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது. கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது இதன் டீசர் வெளியாகி உள்ளது. அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும். இந்த படம் நேரடியாக ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது.