நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை பாக்யஸ்ரீ போஸ். தற்போது அவரது கைவசமாக விஜய் தேவரகொண்டா, சூர்யா, துல்கர் சல்மான், ராம் பொத்தினேனி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து பிரபாஸ் ஜோடியாக நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் ஹனுமன் பட புகழ் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பிரபாஸ் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சூப்பர் ஹீரோ கதையில் உருவாகும் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக பிரபாஸ் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் நடைபெற்றது. இதில் பாக்யஸ்ரீ போஸ் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் பிரபாஸிற்கு ஜோடியாக நடிப்பது உறுதியாகி இருப்பதாக சொல்கிறார்கள்.